• Latest News

    August 09, 2015

    கல்முனை நகரை நவீனமாக்குவோம் சாய்ந்தமருதிற்கும் தனியான பிரதேச சபை: கல்முனையில் ரணில் உறுதியுரை

    (சஹாப்தீன்)
    கல்முனை  நகரையும், அதனை சூழ உள்ள பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்து கல்முனையை பாரிய அபிவிருத்தியை கொண்ட நகரமாக மாற்றுவோம். அத்தோடு, ரவூப் ஹக்கீமும், கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய  சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சாய்ந்தமருதிற்கான பிரதேச சபையை ஏற்படுத்துவோம். 

    இவ்வாறு நேற்று மாலை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
    நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தன் மூலமாக மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தோம். இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முத ரீதியாக மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. எல்லோரும் இலங்கையர் என்ற ரீதியில் சாதி, மத பேதங்கள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

    ஆயினும், இன்று மஹிந்தராஜபக்ஷ இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இனவாதம் பேசி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை. மஹிந்தவை துரத்தி அடிப்பதோடு, இனவாதத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்காகவே ஐ.தே.கவின் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம். நிம்மதியுடன் சகல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஐ.தே.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

    ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமைப்பட்டதனைப் போன்று ஹெலஉறுமய, மலையக தமிழ் மக்கள், முஸ்லிம்  மக்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்துள்ளார்கள். அவர்களின் கட்சிகளும் எம்முடன் உள்ளன. இந்த ஒறறுமையுடன் ஐ.தே.கவின் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஐ.தே.கவின் ஆட்சி வேண்டுமென்று கேட்கின்றார்கள். 10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

    கல்முனை  நகரையும், அதனை சூழ உள்ள பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்து கல்முனையை பாரிய அபிவிருத்தியை கொண்ட நகரமாக மாற்றுவோம். அத்தோடு, ரவூப் ஹக்கீமும், கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய  சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சாய்ந்தமருதிற்கான பிரதேச சபையை ஏற்படுத்துவோம். 

    முகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் 16 ஆயிரம் ஹெக்டயர் ஏக்கரில் வேளாண்மையை செய்வதற்கும் தீர்மானித்துள்ளோம். 

    இவ்வாறு இனங்களுக்கு இடையே ஒற்றுமை, நல்லாட்சி, தொழில் வாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, இனவாதத்தை ஒழித்தல் போன்றவைகளை மேற்கொண்டு புதியதொரு இலங்கையை உருவாக்குவோம். ஏன்றார். 

    இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்குளும் கலந்து கொண்டார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை நகரை நவீனமாக்குவோம் சாய்ந்தமருதிற்கும் தனியான பிரதேச சபை: கல்முனையில் ரணில் உறுதியுரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top