• Latest News

    September 11, 2015

    வன்னியில் ரிசாத்துக்கு எதிரான கூட்டணி! முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தார் மஸ்தான் ஹாஜி

    வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஹாஜி, தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளார்.
     
    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வன்னியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஸ்தான் ஹாஜி மற்றும் அவரது கட்சித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் நேற்று இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

    கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஒரே குழுவாக இயங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் விருப்பம் தெரிவித்தார். அதனை மஸ்தான் ஹாஜியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

    அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது தனித்தனி முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வன்னி மாவட்டத்தில் இவர்களின் கூட்டிணைவு அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான கூட்டணியொன்றுக்கான அத்திவாரமாகவே கருதப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வன்னியில் ரிசாத்துக்கு எதிரான கூட்டணி! முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தார் மஸ்தான் ஹாஜி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top