• Latest News

    November 29, 2015

    மஹிந்த தரப்பில் பிளவு! 3 முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தில் இணைவது உறுதி

    மஹிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகிய இருவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அலகபெருமவுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு உறுப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
    ராஜபக்ச ஆட்சியில் இருந்து 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டு மீண்டும் ராஜபக்ச தரப்பில் இணைந்து கொண்ட பவித்ரா வன்னியாராச்சி இந்த நாட்களில் மிகவும் அமைதியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
    ராஜபக்ச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதனை தவிர்க்கும் அவர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி பெற்றுகொள்வதற்கு ஆயத்தமாகுவதாக குறிப்பிடப்படடுகின்றது.
    வரவு செலவு வாக்களிப்பின் போது இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த இருவருக்கும் மேலதிகமாக ராஜபக்ச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குணவர்தன என்ற ஒருவரும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்த தரப்பில் பிளவு! 3 முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தில் இணைவது உறுதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top