அபு அலா –
அட்டாளைச்சேனை
பிரதேச சுப்பர் சொனிக் காலைவட்ட அணியினருக்கும், புளு இலவன் காலைவட்ட
அணியினருக்கும் இடையிலான சவால் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று
புதன்கிழமை (25) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்தது.
இதில்
நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற புளு இலவன் காலைவட்ட அணியினர் சுப்பர்
சொனிக் காலைவட்ட அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடும்மாறு பணிதத்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் சொனிக் அணியினர் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.
இந்த வெற்றி இலக்கை வைத்து புளு இலவன் காலைவட்ட அணியினர் துடுப்பெடுத்தாடி 9.03 ஓவரில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.பஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்பட்டார் அவர் சுமார் 45 பந்துகளை எதிர்கொண்டு 100 ஓட்டங்களை
புளு இலவன் காலைவட்ட அணியினருக்கு பெற்றுக்கொடுத்து தனது அணியின்
பெற்றிக்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment