• Latest News

    November 27, 2015

    பாலியல் வன்முறைகள் தடுக்கப்படல் வேண்டும்

    அபு அலா –
    பாலியல் வன்முறைகள் இன்று நாளுக்கு நாள் அதிகதித்துக்கொண்டே வருகின்றது. இதனை நாம் எவ்வாறு குறைக்கலாம் இதற்கான என்னவழிமுறைகள் இருக்கின்றது இதைத்தடுக்க எவ்வாறான முறையை கையாளமுடியும் என்று ஓய்வுபெற்ற சமூகசேவை உத்தியோகத்தரும் அட்டாளைச்சேனை அந்நூர் ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவருமான எஸ்.எம்.அமீன் கேள்வி ஒன்றையெழுப்பி உரையாற்றினார்.
     
    பள்ளிவாயல் மகல்லா வாசிகளுக்கான கூட்டம் இன்று காலை வியாழக்கிழமை (26) அந்நூர் ஜூம்ஆப் பள்ளிவாயலில் சுபஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

    அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மிக அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகங்களும், பாலியல் வன்முறைகளும் இடம்பெற்றுவருவதை நாம் அறிந்துவருகின்றோம். இது எதனால் ஏற்படுகின்றது என்பதை அறிந்து அதற்கு என்ன தீர்வுகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பதைப்பற்றி ஒவ்வொரு பள்ளிவாயல் நிருவாகத்தினரும் தங்களின் பள்ளிவாயல் நிருவாகத்தின் கீழுள்ள மகல்லா வாசிகளினூடாக இணைந்து கலந்தாலோசித்து செயற்படுத்தவேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தின் தேவைகளில் மிக முக்கியமான தேவையாக அமைந்து காணப்படுகின்றது.

    கனவனைவிட்டு மனைவி வெளிநாடு செல்லதே முதலாவது காரணமாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பின்றேன். இதனால் கனவன் தனிமைப்பட்டு தனது சிந்தனைக்கு தோன்றும் என்னங்களுக்கு அமைவாக தான் பெற்ற மகளைக்கூட பாராமல் தனது காமப் பசியினை தீர்க்க முனைகின்றான். அதுமாத்திரமல்லாமல் சிறுவர்கள், சொந்த, பந்த உறவினர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை ஈன்றெடுத்த தாயைக்கூட பாராதவர்கள் இன்று எத்தனையோபேர் பாலியல் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை நான் கண்னூடாகவும், பத்திரிகை வாயிலாகவும் அறிந்துவருகின்றோம்.

    இதற்கு என்னகாரணமென்றால் பணமில்லா பிரச்சினை என்றுதான் சொலல்லாம். வருமையின் உச்சகட்டத்தை எட்டியதும் தங்களின் மனைவியை வெளிநாட்டுக்கு பணிப்பெண்னாக அனுப்பி விடுகின்றனர். கனவன் வெளிநாடு செல்வதாக இருந்தால் தனக்கு இன்னும் இலட்சக்கணக்கான பணம் தேவைப்படுகின்ற பாரிய சவாலை அவன் எதிர்நோக்கவேண்டியுள்ளது. அவற்றையெல்லாம் தடுப்பதாக இருந்தால் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி இங்கும் பல இலட்சம் பணம் கிடைக்கின்றது இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை தீர்த்துக்கொள்கின்றான்.

    இந்த சூழ்நிலைக்கு மத்தியில்தான் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்களே தவிற கனவனின் விருப்பத்துக்கல்ல என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியதுள்ளது. இதற்கு நாம் என்ன வழியில் நமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கூட்டத்தினை கூட்டியுள்ளேன் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலியல் வன்முறைகள் தடுக்கப்படல் வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top