2015 தரம் 5 புலமைப் பரிசு பரீட்சையில் நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் 11 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்கள். இம்மாணவிகளையும், இப்பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 33 மாணவிகளையும் பாராட்டிக் கௌரவிக்கும் விழா பாடசாலையின் அதிபர் என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கௌரவ அதிதியாக நிந்தவூர் கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி, நஜீமுனிஸா இப்றாகிம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

















0 comments:
Post a Comment