ரஷ்யா விற்குச் சொந்தமான இராணுவ விமானத்தை
தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கு அறிவித்துள்ளது. சிரியாவின் எல்லைப்
பகுதியில் வைத்து குறித்த விமானம் வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளதுடன், அந்த விமானம் தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவில் ”பயங்கரவாதிகளுக்கு”
எதிராக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்ட தமது இராணுவ விமானத்தை சிரியாவின்
எல்லையில் துருக்கி யுத்த விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா
அறிவித்துள்ளது.
சூட்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான ரஷ்ய
விமானம் சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள லட்டாகியா எனும் பகுதியிலுள்ள
யமாதி கிராமத்தில் வீழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Su-24 ஜெட் ரக ரஷ்ய விமானம் என தாம்
அடையாளங்கண்டுள்ளதாகவும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அதுபற்றி எச்சரிக்கை
விடுத்ததாகவும் துருக்கி அதிபரின் அலுவலகச் செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஒரு ரஷ்ய விமானி இறந்து கிடப்பதை காட்டும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது .

0 comments:
Post a Comment