(எஸ்.எம்.அறூஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய மகாநாடு அடுத்த வருடம் முற்பகுதியில் பாலமுனை
பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று
முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
உயர்பீடக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப்
ஹக்கீம் வெளியிட்டார்.
இதற்கமைவாக பாலமுனை பொது
விளையாட்டு மைதானத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி இம்மகாநாடு
கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்
தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள்,இராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொண்டு
சிறப்பிக்கவுள்ளனர்.
இம்மகாநாட்டில்
நாடுபூராகவுமுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகள்
பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான ஒழுங்குகள்
செய்யப்படவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார
செயலாளரும், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான
சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
பாலமுனை
பொது விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய
மகாநாடு நடைபெறும் என்று கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீம் பாலமுனையில்
இடம்பெற்ற கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் பகிரங்கமாக
அறிவித்திருந்த நிலையில் இம்மகாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மாகாநாட்டின்
ஒருங்கிணைப்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவாகார
செயலாளரும், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச்
செயலாளரும்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளருமான இளம்
சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

0 comments:
Post a Comment