(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை
மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்துவரும் யானைகளின்
தொல்லையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், யானையின்
தாக்குதலால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு நஷ்டயீடுகள்
அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஐ.எல்.எம்.மாஹிர் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற 48ஆவது கிழக்கு மாகாண சபை
அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கிழக்கு
மாகாணத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு சமூகசேவை
திணைக்களத்தினால் வழங்கப்படும் நஷ்டயீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சமர்ப்பித்த தனிநபர்
பிரேரணையை வரவேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அனர்த்தங்களினால்
முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட
வேண்டும் என்று தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த
போதிலும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட
வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. அதற்கான தொகையையும் குறிப்பிட்டு அதற்கான
திருத்தத்தை பிரேரணையில் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார்.
அதுமட்டுல்ல
யானைகளினால் அண்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் பல உயிர்கள்
பலியெடுக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த யானை
பிராச்சினையால் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கும் உரிய நிவாரணத்தினை
பெற்றுக் கொடுக்க கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின்
குடியிருப்பு பிரதேசங்களில் நள்ளிரவு வேளைகளில் புகுந்து மக்களுக்கு
அசௌகரியங்களை கொடுக்கும் யானைகளை பாதுகாக்கும் நோக்குடன் மாத்திரமே
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் செயற்படுகின்றார்களே தவிர பொது மக்களை
பாதுகாப்பதற்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில்
இடம்பெற்ற மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 4 ஆயிரம்
மில்லியன் ரூபா யானைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒதுக்கீடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த யானைகளினால் ஏற்படும்
பிரச்சினைகளை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மாகாண
சபையும் ஒரு பொறிமுறையை கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment