• Latest News

    November 25, 2015

    தெரண தொலைக்காட்சிக்கு சர்வதேச விருது

    லண்டனில் இடம்பெற்ற International CSR Excellence Awards 2015 இல் தெரண தொலைக்காட்சியின் மனுஷத் தெரண நிகழ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

    சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தெரண தொலைக்காட்சி மனுஷத் தெரண வேலைத் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு ஆரம்பித்தது.

    மேலும் இதன் மூலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலுள்ள சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் பொருட்டு தெரண தருவோ புலமைப்பரிசில் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும்.

    ரீவி தெரணவின் மனுஷத் தெரண வேலைத் திட்டத்தினூடாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வைத்திய ஆலோசனைகள் மற்றும் இலவச மருத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    மனுஷத் தெரணவின் 16வது வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை வெலிஓயா சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தெரண தொலைக்காட்சிக்கு சர்வதேச விருது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top