அபு அலா -
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான விஷேட கலந்துரையாடல் நேற்று முந்தினம் (23) கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் ஹாபிஸ் தலைமையில் இடம்பெற்ற
இக்கலந்துரையாரலில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், கிழக்கு
மாகாண உள்ளுராட்சி ஆணையார் எம்.வை.எம்.சலீம் உள்ளிட்டோர் இதில்
கலந்துகொண்டனர்.
இந்த
விஷேட கலந்தரையாடலில் கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின்
செயலாளர்கள் பங்கேற்று தங்களின் மன்றங்கள் கடந்த காலங்களில் பல சவால்களை
எதிர்கொண்டு வருவதாகவும், மன்றங்களில் நிலவும் குறை நிறை மற்றும்
நிதிக்கூற்று தொடர்பாகவும் முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் ஹாபிஸ், முதலமைச்சின்
செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையார்
எம்.வை.எம்.சலீம் ஆகியோர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
மாநகர
நபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள் போன்ற சபைகள் தற்போது பல சவால்களை
எதிர்நோக்கி வருவதை நானறிவேன். நாம் மக்களுக்காகத்தான் சேவை செய்வதற்கு
இருக்கின்றோம். மக்கள் இல்லை என்றால் நாமும் இல்லை, சபைகளும் இல்லை என்பதை
நாம் அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும்.
தற்போது
மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெள்ள அபாயத்திலிருந்து
பாதுகாக்கப்படவேண்டும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாம் எந்தெந்த
வழிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அந்தந்த முறைகளில்
உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல வழிவகைகளையும் செய்து தருவதற்கு
நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நீங்கள் உடனடியாக
தங்களின் சபைகளினூடாக மேற்கொள்ளவும்.
அத்துடன்
சபைகளுக்கு கிடைக்கும் பணம் சரியான முறையில் மக்களுக்கு பயன்மிக்கதாக
அமையும் வண்ணம் மிக கண்ணும் கருத்துமாக செலவிடவேண்டும். ஒரு ரூபாவைக்கூட
செலவு செய்வதாயின் அதன் மூலம் எந்தவொரு குடிமகனும் பாதிப்புக்குள்ளாகாத
வகையில் செயற்பட வேண்டும் என முதலமைச்சர் இதன்போது வலியுறுத்தி கூறினார் .


0 comments:
Post a Comment