அபு அலா -
அம்பாறை,
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அட்டாளைச்சேனை 11 ஆம்
பிரிவை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (27) 9.00 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு
மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற
இக்கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சிரேஷ்ட
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்
உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்கத்தின்
தலைவர், கிராம சேவகர் மற்றும் குறித்த பிரிவிலுள்ள முக்கிய பிரமுகர்கள்
பலர் இதில் கலந்துகொண்டு அபிவிருத்தி தொடர்பில் பல கருத்துக்களை
அமைச்சரிடம் முன்வைத்தனர்.
அங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த
கால அரசாங்கத்திலிருந்த அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி
வேலைகளில் அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதை
நானறிவேன். ஆனால் இந்த அரசாங்கத்தினால் இவ்வாறான பாகுபாடுகள் ஒருபோதும்
காட்டப்படாது என்பதை நான் இந்த இடத்தில் எத்திவைக்க எனக்கு பாரிய
கடமைப்பாடு எனக்குள்ளது என்றார்.
இன்றைய
ஆட்சியில் இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை
மேற்கொள்ளும்போது எவ்வித பாகுபாடுகளும் காட்டப்படாமல் எல்லாப்
பிரதேசங்களிலும் சமமான பங்கினை வழங்கி அதன்மூலம் பாரிய அபிவிருத்தி வேலைகளை
முன்னெடுக்கவுள்ளது. அதன் மூலம் அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவை எல்லா
விதத்திலும் அபிவிருத்திகளை மேற்கொள்ள என்னாலான சகல பங்கினையும் வழங்குவேன்
என்றார்.

0 comments:
Post a Comment