எந்தவொரு அபிவிருத்தி வேலையும் முறையான அனுமதி பெற்று நடைபெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாது அரசியல் அதிகாரத்தில் அபிவிருத்திகள் நடைபெறுமாயின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கடந்த காலத்தில் நிந்தவூரில் முறையாக அனுமதி பெற்றுக் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் கொந்தராத்துக் காரர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் நஸ்டங்களை அடைந்தார்கள்.
தற்போது நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் அதாவது கடற் கரையிலிருந்து சுமார் 200 மீற்றருக்கு உட்பட்டதொரு இடத்தில் ரூபா 05 மில்லியன் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலை கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்விடத்தில் எந்தவொரு கட்டடமும் கட்ட முடியாதென்று ஏற்கனவே நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட இடத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை கட்டத்தை கட்ட முடியாதென்பற்காக பிரதேச செயலாளர் அனுமதி வழங்கவில்லை. வேறு இடத்தில் கட்டுமாறு பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று அடிக்கல் நடப்பட்டது. இதில் பிரதேச செயலாளர் கலந்து கொள்ளவுமில்லை. கலந்து கொள்வது கூட அனுமதியாக மாறிவிடும் என்பதாலும், அது தமது தொழிலுக்கு பிரச்சினை என்பதாலும் அவர் செல்லவில்லை என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுமதி பெறாது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட கட்டத்திற்கு அனுமதி தருமாறு பிரதேச செயலாளரை அரசியல் சக்திகள் சீண்டிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள். முறையான அனுமதி பெறாது நிந்தவூரில் ஏற்கனவே கட்டப்பட்டு அதற்கான செலவுகளை பெற்றுக் கொள்ளாது கொந்தராத்துக்காரர்கள் தவித்தது போன்று.......?
அரசாங்கத்தின் பணத்தினை வீண்விரயம் செய்யும் நடவடிக்கை என்றும் கூறலாம்.
ஏனோ தெரியாது நிந்தவூரில் கட்டடங்கள் கடற்கரை அண்மித்த இடங்களுக்கு சென்று கொண்டிருப்பது? காணிப் பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மர்ஹும் அஸ்ரப் நிந்தவூர் தபால் நிலையக் கட்டடத்திற்கு காணி இல்லாத போது, விலைக்கு காணி வாங்கப்பட்டு தபால் நிலையம் கட்டப்பட்டது. இந்த நடைமுறையை சிந்தித்தால் என்ன?
கல்முனை மாநகர சபையில் முரண்பாடு
கல்முனை மேயருக்கும், மு.காவின் உறுப்பினர்களுக்குமிடையே பலத்த கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இதன் ஒரு அங்கமாக நேற்று மாலை (26.11.2015) நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்த அமர்வில் பிரதி மேயர் தனக்கு அநீதி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். மேயர் சாய்ந்தமருது பிரதேசத்தை புறக்கணிக்கின்றார். இப்படியான காரணங்களினால்தான் அவர்கள் பிரிந்து போவதற்கு எண்ணுகின்றார்கள். ஆணையாளர் பற்றியும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இவர் பேசும் போது மு.காவின் ஏனைய உறுப்பினர்கள் அதற்கு அங்கிகாரம் அளிக்கும் முகத்துடன் தலையசைத்துக் கொண்டார்கள். மேயர் இமை வெட்டாது கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜவாத் கிழக்கு மாகாண உறுப்பினராக வருவதனை தடுக்க எடுத்து முயற்சி தோல்வி
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த ஜெமீலை மு.கா கட்சியிலிருந்து நீக்கி அவரின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை அடுத்த இடத்தில் உள்ள கே.எம்.ஜவாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜவாத் உறுப்பினராக வருவதனை தடுப்பதற்காக ஜெமீலை மு.காவில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு ஒருவர் கச்சை கட்டியுள்ளார். ஆனால், தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹஸன்அலி ஆகியோர்கள் துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
ஜவாத் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவி போய்விடுமென்று பயந்து கொண்ட அவரின் அரசியல் எனிமி அட்டாளைச்சேனைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நசீருக்கு கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் பதவியை கொடுக்க வேண்டுமென்று காய் நகர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், அவரின் இந்த காய் நகர்த்தல் அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அக்கரைப்பற்றுக்கு அமைச்சர் பதவியையும் இல்லாமலாக்கியுள்ளது. அரசியலில் மடுத் தோன்றுவது என்று சொல்லுவார்கள். ஆனால், சிலர் மடு என்று நினைத்துக் கொண்டு தங்களுக்கு பங்கர் தோன்றுகின்றார்கள்.

0 comments:
Post a Comment