• Latest News

    December 06, 2015

    சென்னையில் 100 ஆண்டுகளில் வரலாறு காணாத பருவமழை: ரூ.1 லட்சம் கோடி இழப்பு

    வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்து விட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் சென்னை முற்றிலும் முடங்கியது.
    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதை தொடர்ந்து கடந்த 1 மற்றும் 2–ந் தேதிகளில் பெய்த மழையும் புதிய சாதனை ஏற்படுத்தியது.
    வரலாறு காணாத பெய்த பலத்த மழையால் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஏற்கனவே ரூ.50 ஆயிரம் கோடி இழப்பை தொட்டு இருந்தது. மேலும் சேதம் நிலமைகளை கணக்கிட்டால் மொத்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியை தொடும் என்று வருவாய் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கடந்த 1 மற்றும் 2–ந் தேதி சென்னை மற்றும் புறநகரில் பெய்த பலத்த மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதாலும் ஏராளமான குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்தன.
    அடையாறு ஆறு மற்றும் கூவத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மிகவும் பாதிப்புக்குள்ளானது.
    மிகவும் வசதி படைத்தவர்கள் இருக்கும் தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
    இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டெலிவிஷன்கள், குளிர் சாதன பெட்டிகளை இழந்தனர். மேலும் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் சேதமானது. முடிச்சூர், லட்சுமிபுரம், பணிமங்கலம், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளிலும் இதே நிலைமைதான் காணப்பட்டது.
    இதேபோல தமிழ்நாட்டில் பெய்த பலத்த மழையில் சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் பயிர்கள், கால்நடைகள், குடிசைப்பகுதிகள் லட்சக்கணக்கில் சேதமானது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சென்னையில் 100 ஆண்டுகளில் வரலாறு காணாத பருவமழை: ரூ.1 லட்சம் கோடி இழப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top