• Latest News

    December 05, 2015

    மருதமுனையில் வெற்றிகரமாக நிறைவடைந்த மனாரியன்ஸ் 95 இனரின் இரத்த தான முகாம்

    மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன்ஸ் 95 இனரால் ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று காலி 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அல்-மானார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவில் மிக சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.

    மேற்படி இரத்ததான நிகழ்வானது கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களான எம்.எஸ். நஸ்ரின் ஜஹான் மற்றும் என். ரமேஷ் ஆகியோர் அடங்கலான இரத்த வங்கி பிரிவு ஊழியர்களின் அனுசரணையோடு நிகழ்த்தப்பட்டதுடன் மருதமுனையைச் சேர்ந்த 103 பேர் கலந்துகொண்டு இவ் இரத்ததான நிகழ்வானது சிறப்பாக நடைபெற தமது பங்களிப்பினையும் வழங்கிவைத்தனர்.

    இன் நிகழ்வினை ஏற்பாடு செய்த மனாரியன்ஸ் 95 அமைப்பானது அண்மையக் காலமாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவின் பௌதீக வள விருத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    காமிஸ் கலீஸ்









     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனையில் வெற்றிகரமாக நிறைவடைந்த மனாரியன்ஸ் 95 இனரின் இரத்த தான முகாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top