• Latest News

    December 05, 2015

    அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரச ஒசுசலவினை நிறுவ பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை!

    (சுலைமான் றாபி)
    அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரச ஒசுசல நிறுவப்படும் என சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
    நேற்றைய தினம் (04) கொழும்பு Grand Oriental ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் வருடா வருடம் நடைபெறும் ("Dealer's Convention - 2015" ) முகவர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே பிரதியமைச்சரினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதேவேளை இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை மற்றும் மருதமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரச ஒசுசலவினை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ் விடயம் சம்பந்தமாக ஆராய அம்பாரை மாவட்டத்திற்கு அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் எதிர்வரும் வாரமளவில் விஜயம் செய்யவுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார்.
    இதேவேளை இந்த விருது வழங்குதல் நிகழ்வில் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன  பிரதம அதிதியாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரச ஒசுசலவினை நிறுவ பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top