( எம்.எஸ்.எம்.சாஹிர்)
களுபோவில,
ஆசிரி வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில்
நேற்று மாலை 6.30 மணியளவில் (02.12.2015) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அவ்வேளையில் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் இருந்தவர்கள் விரைந்து
செயற்பட்டதினால், பெரிதாகப் பரவ இருந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வந்த தீயணைப்புப் படையினர் முற்றாகத்
தீயை அணைத்தனர்.
தீ ஏற்பட்ட
வேளையில் வெதுப்பகத்தில் யாரும் இருக்கவில்லை என்றும்
தெரிவிக்கப்படுகின்றது. வெதுப்பகம் தீப்பற்றி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன்
தீ ஏற்பட்டதுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விடயம் அறிந்து வந்த
களுபோவில அவசர பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:
Post a Comment