அபு அலா -
அட்டாளைச்சேனை
அல் அர்ஹம் வித்தியாலய 32 மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சீருடைகளை
வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
வித்தியாலத்தின்
அதிபர் அன்சார் தலைமையில் இன்று (03) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம
அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது அங்கு அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற
உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்,
அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை
சபையில் பிரரேணையாக கொண்டு சென்று எவ்வாறு உரையாற்றுகின்றார்களே அதை
விடவும் எந்த கூச்சங்களின்றி தங்களின் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்ததை
பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாவுள்ளது.
எவ்வளவு
தைரியமானவர்களானாலும் அவர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொண்டு பேசும்போது
சிறு தடுமாற்றமடைவார்கள். அந்த தடுமாற்றங்களும் உங்களிடத்தில்
காணப்படவில்லை. அந்தளவு அதிபர், ஆசிரியர் குழாமினரின் அர்ப்பணிப்பு
அமைந்துள்ளதை இதன் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது என்றார்.
இந்நிகழ்வில்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,
அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், ஆசிரிய ஆலோசகர்கள்,
பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







0 comments:
Post a Comment