• Latest News

    December 04, 2015

    எமது சமூகத்தின் தந்தையை நாம் இழந்து தவிக்கின்றோம்: எஹியாகான்

    கல்முனை மாநாகர சபையில் மேயர் பதவியையும், பிரதிமேயர் பதவியையும் அலங்கரித்த மறைந்த மசூர் மௌலானா உயிர் வாழ்ந்த ஒரேயோரு முஸ்லிம் செனட்டரென்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவை இட்டு அவருடைய குடும்பத்தவர்களும்  அம்மாவட்ட மக்களும், பொதுவாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் பெரிதும் கவலையுடன் இருக்கின்றார்கள்.

    மசூர் மௌலானாவை அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களுடன் அவருக்கிருந்த இறுக்கத்தினாலும், நெருக்கத்தினாலும் தமது மண்ணுக்கும், நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கும் அவராற்றிய சேவைகள் அளப்பரியன. மருதமுனை மக்களின் மனங்களை விட்டு என்றுமே அகல முடியாத மாபெரும் மக்கள் சேவகனாக மதிக்கப்படும் மசூர் மௌலானா.

    அன்னாருக்கு எல்லாம் வல்லஅல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை நிரந்தரமான தங்குமிடமாக்குவானாக. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மருதமுனை மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    A..C.YAHIYAKHAN
    SLMC
    HIGH COMMAND MEMBER
    TREASURER AMPARAR AND
    DIRECTOR OF FINANCE

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமது சமூகத்தின் தந்தையை நாம் இழந்து தவிக்கின்றோம்: எஹியாகான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top