முன்னாள் செனட்டர்
மசூர் மௌலானாவின்
மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்ததாக பிரதி அமைச்சர் சட்டத்தரணி
எச்.எம்.எம். ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வனுதாபச் செய்தியில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று (04)
அதிகாலை
2 மணியளவில்
கொழும்பில் வபாத்தானார். மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்முனை மாநகர சபையின் முதல்வர் என பல
உயர் பதவிகளை வகித்த மசூர் மௌலானா தனது இறுதிக்காலம் வரை தன்
சமூகத்திற்காகவும், தமிழ் பேசும் சமூகங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்து
சேவையாற்றிய ஒருவராகும்.
இவரது
மரணச் செய்தி உண்மையில் எமது பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கை முஸ்லிம்களுக்கும்
பேரிழப்பாகும். தான்
பிறந்த கிராமத்தின் மீது அதீத அக்கறையுள்ள அரசியல் தந்தையான மசூர் மௌலானாவின்
மறைவையிட்டு கவலையடைகின்றேன்.
இவர் தமிழ் அரசியல்
தலைமைகளோடு தனது அரசியலை ஆரம்பித்த ஒரு தலைமையாகும். தமிழ், முஸ்லிம்
நல்லிணக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, உரிமை சார்ந்த
விடயங்களில் முன்னின்று உழைத்த ஒரு அரசியல் முதிசமாக அவரை நான் பார்க்கின்றேன்.
அன்னாரின் மறைவு முஸ்லிம், தமிழ்
சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
இவரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது
குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும்
எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் மறுமை
வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன். அத்துடன் வல்ல
இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்க்கமான ஜன்னதுல் பிர்தௌசை வழங்க
பிரார்த்திக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment