எம்.வை.அமீர் -
கல்முனை கல்வி வலயத்துக்குள் இருக்கும் சாய்ந்தமருது
றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் தரம் ஐந்து மாணவர்
தின விழாவும் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் பாடசாலையின்
கேட்போர் கூடத்தில் 2015-12-04 அன்று இடம்பெற்றது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்
ஜலீல் கலந்து, திறமைகாட்டிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களையும் பரிசில்களையும்
வழங்கி வைத்தார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்
பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் மற்றும் சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர்
ஐ.எல்.ஏ.றஹுமான் ஆகியோரும் விசேட அதிதிகளாக விசேட கண் வைத்திய நிபுணர் டாக்டர் அல்
அமீன் றிசாத், மின் அத்தியட்சகர் எஸ்.எம்.ஆரீஸ் அக்பர், LOLC முகாமையாளர் எம்.எச்.மஸ்வூத் ஹசன் மற்றும் பிரமுகர்களான
எம்.எல்.ஏ.ஜப்பார், ஏ.சஹறூன்,ஏ.றாசீக், எல்.நாசர், எம்.எஸ்.எம்.சாஜித் போன்றோரும்
பெரும்திரளான பெற்றோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
திறமைகாட்டிய மாணவர்களுக்கு அதிபர் மற்றும்
ஆசிரியர்கள் தங்களது தனிப்பட்ட பரிசில்களையும் வழங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.








0 comments:
Post a Comment