• Latest News

    December 05, 2015

    கல்முனை கல்வி வலயத்துக்குள் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

    எம்.வை.அமீர் -
    முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவனம் (மெஸ்ரோ) ஸ்ரீலங்கா அமைப்பு, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு டிசம்பர் 3ம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

    மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ,எம்.நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயத்தில் சித்தியடைந்த சுமார் 214 மாணவர்கள் கெளரவிக்கப்படதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களும் விசேடமாக  கெளரவிக்கப்பட்டனர்.
    இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம.எம்..ஹரிஸ் கலந்து மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார். 

    நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல்,கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர்எம்.எச்.எம்.கனி ஆகியோருடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் கல்வியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
    மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கோலோச்சிய இந்நிகழ்வில் பெரும்திரளான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை கல்வி வலயத்துக்குள் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top