( முஹம்மட் ஜெலீல் ,நிந்தவூர் )
வெளிநாடுகளில்
வாழும் கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் மற்றும் நிந்தவூர் “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பினர்களும்
வழங்கிய உதவிகளைக் கொண்டு எமது நிந்தவூர்
“செரிட்டி பவுண்டேசன்” அமைப்பின் ஆதரவோடு இறக்காமத்தில் உள்ள சது / இலுக்குச்சேனை அ
.மு. க. பாடசாலையில் கல்விபயிலும் மிகவும் வறிய மாணவ மாணவிகளுக்கு தேவையான கற்றல்
உபகரணங்கள் இன்று 03-12-2015, வியாழக்கிழமை “செரிட்டி
பவுண்டேசன்” அமைப்பின் உருபினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்தநிகழ்வில்
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில்
“செரிட்டி பவுண்டேசன்” அமைப்பின் செயலாளர் “ஷாபி மேஷா. அவர்கள் உரையாற்றுகையில்
எமது “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பானது பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது இதில்
குறிப்பாக எமது அமைப்பானது ஏழை எழிய குடும்பங்கள் மற்றும் வறுமையினால் கல்வியை
தொடர முடியாத வறிய மாணவர்களை இனங் கண்டு அக்குடும்பங்களுக்கும் மாணவர்களின்
கல்வியை மேன்படுத்துவதற்கும் எம்மால் முடிந்தவரை உதவிகளை மேற்கொள்வதே எமது நோக்கமென
கூறினார்.





0 comments:
Post a Comment