அபு அலா -
அட்டாளைச்சேனை
அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு
செய்யப்பட்ட அர்ஹமின் ‘சாதித்த மாணவர்களும், சரித்திர ஆசிரியர்களும்’
கௌரவிப்பு விழா (03) நேற்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில இ்டம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு
மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை நட்சத்திர அதிதியாகவும்,
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் கௌரவ
அதிதியாகவும் கலந்துகொண்டு சாதித்த மாணவர்களையும், சரித்திர
ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தி பரிசில்களையும், ஞாபகச் சின்னங்களையும்
வழங்கி கௌரவித்தனர்.
இதன்போது
பாடசாலையில் சாதித்த மாணவர்களும், சரித்திர ஆசிரியர்களும் பாராட்டி
கௌரவிக்கப்பட்டதுடன், விசேடமாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களும் மற்றும் கற்பித்த ஆசிரியரும் நீண்ட காலமாக
அதிபராகவிருந்து பாடசாலைக்கு சேவையாற்றிமைக்காக அதிபர் எம்.ஏ.அன்சார்
ஆகியோர் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment