கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும், மூத்த கல்விமானுமான
காலஞ்சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் நினைவுப் பேருரை கடந்த ஞாயிற்றுக்கிழமை
(29) விளையாட்டு துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை
ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரண்டாவது அமர்வில் கொழும்பு கிளையின் வருடாந்த
பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.
கிளையின்
தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்
வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகவும்,
சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஏ. நஜீம் மற்றும் பொறியியலாளர் யூ.எல்.ஏ.பாரூக்
ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
இந்த
நிகழ்வில் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான குழு கலந்துரையாடலொன்றும்
இடம்பெற்றது. இதில் மொரட்டுவ பல்கலைக்கழக பதிவாளர் ஜௌபர் சாதீக், சுகாதார
அமைச்சின் பணிப்பாளரும் சிரேஷ்ட வைத்தியருமான ஏ.எல்.எம்.பரீட், ஓய்வுபெற்ற
வலயக் கல்வி பணிப்பாளா மருதூர் ஏ. மஜீத் மற்றும் களுத்துறை முஸ்லிம் மகா
வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் இதில் வளவாளர்களாகக்
கலந்துகொண்டனர்.
இதன்போதுஇ மர்ஹூம்
எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவு மலரொன்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்
பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் வெளியிடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நிகழ்வின்
இரண்டாவது அமர்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க
கொழும்புக் கிளையின் வருடாந்த மாநாடும் இடம்பெற்றது.
இதன்போது 2016ஆம் ஆண்டுக்கான 31 பேரைக் கொண்ட புதிய செயற்குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது














0 comments:
Post a Comment