• Latest News

    July 22, 2016

    மர்மமான உடல் பாதிப்பால் வளர்ச்சி தடைப்பட்டு சிறிய பிளாஸ்டிக் வாளியில் வாழும் யுவதி

    நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த 19 வயது யுவ­தி­யொ­ருவர், மர்­ம­மான உடல்­நலப் பாதிப்­புக்­குள்­ளாகி உடல் உறுப்­பு­களின் வளர்ச்சி தடைப்­பட்­டதால் சிறிய பிளாஸ்டிக் வாளி­யொன்றில் தனது பெரு­ம­ளவு பொழுதைக் கழிக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளார்.

    கனோ நகரைச் சேர்ந்த ரஹ்மா ஹருனா என்ற மேற்­படி யுவதி பிறக்கும் போது ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யா­கவே பிறந்­துள்ளார்.

    ஆனால் அவர் 6 மாதக் குழந்­தை­யாக இருந்த போது அவ­ரது உடல் உறுப்­புக்களின் வளர்ச்சி திடீ­ரென தடைப்­பட்­டது.

    இந்­நி­லையில் ரஹ்­மா­வுக்கு கடும் காய்ச்­சலும் வலியும் ஏற்­பட்­டது. அத்­துடன் உடலில் ஏற்­பட்ட வலி கார­ண­மாக அவர் தனது முழு­மை­யாக வளர்ச்­சி­ய­டை­யாத அவ­ய­வங்­களை பயன்­ப­டுத்த முடி­யாது போனது. இத­னை­ய­டுத்து அவர் தனது உடல் சம­நி­லையைப் பேணி உடல் வலியை தணி­விக்க பிளாஸ்டிக் வாளியொன்றில் வாழக் கற்­றுக்­கொண்­டுள்ளார்.

    தற்­போது அவர் தனது வய­தை­யொத்த ஏனைய இள­வ­ய­தி­னர்கள் போன்று மகிழ்ச்­சி­க­ர­மாக இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வரு­வ­தாக அவ­ரது தாயா­ரான பாடி தெரி­வித்தார்.

    அவர் தனது 10 வயது தம்­பி­யு­டனும் மூத்த சகோ­த­ரி­யு­டனும் பழ­கு­வதில் ஆர்வம் காட்டி வரு­வ­தாக அவர் கூறினார்.

    ரஹ்மா ஹரு­னா­வுக்கு அன்­றாடக் கட­மை­களை செய்வதற்கு உதவி வரும் பாடி, அவரை பொழுது போக்காக வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மர்மமான உடல் பாதிப்பால் வளர்ச்சி தடைப்பட்டு சிறிய பிளாஸ்டிக் வாளியில் வாழும் யுவதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top