அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் இரண்டு
விடயங்களும் ஒரே சமமான நிலையில் நிறைவேற்றப்படும் போதுதான் 65
வருடகாலமாக அனுபவித்த துன்பங்கள் இனியும் அனுபவிக்காது இருக்க
முடியும். ஆனால் இவ் இரண்டு விடயங்களிலும் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்கிறது என
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஐக்கிய இலங்கைக்குள்
தீர்வு காண்பதற்கு தயாராக இருக்கின்றோம். இங்கு தனிநாடு பற்றி பேச
இடமுமில்லை சட்டமும் இடம்கொடுக்கவில்லை. ஆகையால் ஐக்கிய
இலங்கைக்குள் தமிழ் தேசத்தில் முற்று முழுதாக அங்கீகரிக்கின்ற
வகையிலும் எங்களுடைய பிறப்புரிமையாக இருக்கின்ற சுயநிர்ணய
உரிமையையும் முழுமையாக அனுபவிக்க கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும்
என்பதில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம்.
அந்த வகையில் தேர்தல் முடிவடைந்த பிற்பாடு தமிழ் மக்கள்
பேரவை என்ற கூட்டமைப்பு உருவாகும்போது எங்களுடைய பங்களிப்பு
அதில் இருந்தது. அந்த தீர்வு யோசனையில் தமிழர்களுடைய தேசம்
அங்கீகரிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய தனித்துவமான இறைமை
அங்கிகரிக்கப்பட்டு சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி தீர்வை
முன்வைக்கும் வகையில் தான் அந்த தீர்வு முன்வைக்கப்பட்டது.
நாங்கள் அந்த விடயத்தில் உறுதியாக இருந்த காரணம் தமிழீழ
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு 2009 மே மாதம் போர்
முடிந்தபிற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அங்கம் வகிக்கும் போது
அவர்களுக்குத் தெளிவாக கூறினோம். அவர்கள் தமிழ் தேசிய வாதத்தை
வலியுறுத்தக்கூடாது. தேசிய வாதத்தை விட்டு வேறு விதங்களில் ஆட்சியை
முன்னெடுக்க வேண்டும் என்றனர். இந் நிலையில் தான் நாங்கள் கொள்கை
ரீதியாக முரண்பட்டு அங்கிருந்து வெளியேறினோம்.
பின்பு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தமிழ்
தேசத்தை தெளிவாக வலியுறுத்தி எங்களுடைய தனித்துவமான இறைமையையும்
வலியுறுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டியை முன்வைத்த
போது தமிழ் மக்கள் பேரவை தனது தீர்வுத்திட்டத்தை வைத்த பிற்பாடு அவசர
அவசரமாக வடக்கு மாகாண சபையம் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது.
வடக்கு மாகாணத்தின் தீர்வுத்திட்ட யோசனையில் தேசம் என்ற விடயமும்
தனித்துவமான இறைமை என்ற விடயமும் வலியுறுத்தப்படாமல் வெறுமனே
சமஸ்டி சுயநிர்ணயத்தை வலியுறுத்தியுள்ளார்கள். இது வடமாகாண
சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவாகும்.
சமஷ்டி பற்றி தமிழ் மக்கள் பேரவை தேசம், இறைமை,
சுயநிர்ணயம், சமஷ்டியை வலியுறுத்துகிறது. வடமாகாண சபை சமஷ்டி
சுயநிர்ணயத்தை மட்டும் வலியுறுத்துகின்றது. கூட்டமைப்பு தலைமை
சமஷ்டியை பற்றிக் கதைக்கக்கூடாது சுயநிர்ணயத்தை கதைக்க தேவையில்லை
என கூறுகின்றது.
நாங்கள் சிங்கள தரப்போடு பேசுவதற்கு முன்பாகவே தமிழ்
அரசியலில் இருக்கக்கூடிய கோட்பாடுகளில் இருக்கக்கூடிய அனைத்து
விடயங்களையும் கணிக்காதுவிட்டு விடுகிறார்கள். சிங்கள தரப்பு
தமிழர் தரப்புடன் பேச முன்பாகவே ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.
சமஷ்டியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகின்றார்கள்.
தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் பேசுவதற்கு முதலே தமிழ்
தரப்பு அனைத்து விடையங்களையும் விட்டுப்போட்டுத்தான்
பேச்சுவார்த்தைக்கு போகப் போகிறோமா- ஆகவே இந்த ஆபத்தை மக்களுக்கு
சுட்டிக்காட்டவேண்டும். காரணம் தமிழ் மக்களை பொறுத்த வரையில் இரண்டு
விடயங்கள் முக்கியம் வாய்ந்தது. இதில் இருந்து விலகினால் தமிழ்
மக்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
அரசியல் தீர்வு பொறுப்புக்கூறலும் இரண்டு விடயங்களும்
ஒரே சமமான நிலையில் வந்து நிறைவேற்றப்படும் போது தான் தொடர்ந்தும் 65
வருடகாலமாக அனுபவித்த துன்பகங்களை இனியாவது அனுபவிக்காத நிலை
வேண்டும். தீர்வு சம்பந்தமான விடையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மிகவும் தவறான பாதையில் போகிறது. நாங்கள் பேசுகின்ற விடயத்திற்கு
முன்பாகவே அனைத்தையும் கைவிட்டுச் செல்லும் நிலையே காணப்படுகின்றது.
இதில் மக்கள் அவதானம் செலுத்தவேண்டும்.
நாம் சொல்லி வந்தது ஜெனிவா தீர்மானம் சர்வதேச
விசாரணைக்கு கொண்டு போகப்போவதில்லை. அது தமிழ் மக்களுடைய
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுடைய பொறுப்புக்கூறப்படும்
தீர்மானமாக இல்லை. வெறுமனெ மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும்
விடயமாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு, காணி, நீதி,
நியாயம் கிடைக்கவேண்டும். என்னும் அடிப்படையில் தீர்மானம்
அமையவில்லை என்பதே எமது குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
தற்போது அவ்விடயம் நிரூப்பிக்கப்படுகிறது. நாம்
தெளிவாக குறிப்பிட்டோம் தமிழ் மக்களுடைய அநியாயங்கள் அழிவுகளை
வைத்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்
என்றவகையில் நாம் உறுதியாக இருந்திருந்தால் எங்களுடைய
பொறுப்புக்கூறல் விடயம் முழுமையாக அடையாத வகையில் நீங்கள் தீர்மானம்
கொண்டுவருகின்றீர்கள் என்று தமிழ் மக்களை
பிரநிதித்துவப்படுத்தும் தரப்பு வலியுறுத்தியிருந்தால்
தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பொறுப்புக்கூறலையும்
உள்ளடக்கியிருக்கும். ஆனால் எமக்கு கிடைத்தது ஆட்சிமாற்றம்
அதன்பிற்பாடு பொறுப்பக்கூறல் விடயம் கைவிடப்படும் நிலைதான் தற்போது
நிலவிவருகின்றது.
ஜெனிவாவிற்கு செல்வதற்கு முன் மேற்கு நாடுகளின்
தூதுவர் ஒருவர் என்னை சந்தித்தார். அதில் பேசப்பட்ட விடயம் சர்வதேச
பங்களிப்பு தொடர்பில் 2015 செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தில் உள்ளக விசாரணையில் சர்வதேச பங்களிப்பு
வலியுறுத்தப்படவில்லை. அது சிபாரிசு செய்யப்பட்டதே தவிர
கட்டாயம் என்பதை வலியுறுத்தவில்லை என கூறப்பட்டது.
சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில் ஆட்சி மாற்றம்
நடைபெற்ற பிற்பாடு பொறுப்புக்கூறல் விடயம் மேற்கத்தேயத
நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்பதுதான்
உண்மையான நிலைப்பாடாக உள்ளது.
இதனை 2012 ஆண்டில் இருந்து கூறிவந்தோம். கூட்டமைப்புப்
பேச்சாளர் ஜெனிவா சென்று அனைத்து தரப்பிற்கும் கூறிய விடயம் தற்போது
உள்ள அரசாங்கத்தின் கொள்கை சரி. அது சம்பந்தமாக எடுத்துள்ள
நடவடிக்கைதான் போதாது அவ்வாறு என்றால் கொள்கை சரியா-? தற்போதைய
ஜனாதிபதியும் பிரதமரும் மிகத் தெளிவாக ஒற்றையாட்சி தான் என்பதை
தெளிவாக கூறிவருகின்றார்கள். சமஷ்டியை உத்தியோகபூர்வமாக நிராகரித்து
இருக்கின்றார்கள். வடகிழக்கிற்கு இணைப்பு நடக்காது என்கிறார்கள்.
ஒற்றையாட்சி சமஸ்டியை நிராகரிக்கின்றது.
தமிழ் மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்தில்
இருந்து சர்வதேச பொறிமுறைதான் வேணும் மற்றையது எல்லாம் ஏமாற்றமாகவே
முடியும் என்பதை சுட்டிக்காட்டினோம். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
கூட்டமைப்பும் அரசாங்கமும் ஏன் சர்வதேசம் உள்ளக பொறிமுறையூடாக சர்வதேச
பங்களிப்புடன் ஒரு நீதி நியாயம் கிடைக்கும் பொறிமுறை உருவாக்குவோம் எனக்
கூறினார்கள். ஆனால் அதிலும் இலங்கை அரசும் சர்வதேச சமூகம் கைவிடுகிறது.
பொறுப்புக்கூறல் விடயமும் ஏமாற்றமே என்றார்.
0 comments:
Post a Comment