அம்பாறை, ஒலுவில் பிரதேச மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட
600 ஏக்கர் பொன்னன் வெளிக் காணிக்கான உரிய தீர்வினைப் பெற்றுத்தர
வேண்டுமென பொன்னன்வெளிக்கண்ட விவசாயிகள் சங்கம் நல்லிணக்க
பொறிமுறைகள் செயலணியிடம் மகஜர் கையளித்துள்ளது.
இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1987ஆம்
ஆண்டு தீகவாபி புனித பிரதேசமாக்கப்பட்டதைத் தொடர்ந்து
இப்பிரதேசத்தில் புதிதாக குடியேற்றம் செய்யப்பட்ட மாத்தறை,
அம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள்
முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அபகரித்துள்ளதுடன் அங்கு
விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் விவசாயிகளையும்
துரத்தியடித்தனர்.
ஒலுவில் முஸ்லிம் விவசாயிகளினால் 1940 ஆம் ஆண்டு இப்பகுதி துப்புரவு செய்யப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
1950ஆம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 80 விவசாயிகளுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்கு காணிக்கச்சேரி நடத்தப்பட்டு 1974ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்க அதிபரால் 150 விவசாயிகளுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டது.
1987 இல் தீகவாபி புனித பிரதேசமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரதேசத்திற்கு புதிதாக மாத்தறை, அம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் மீளக்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களால் முஸ்லிம்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சில முஸ்லிம் விவசாயிகளால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு முஸ்லிம் விவசாயிகள் சார்பில் தீர்வும் வழங்கப்பட்டது. இருப்பினும் இத்தீர்ப்பைப் பயன்படுத்தி விவசாயக் காணிக்குள் முஸ்லிம் விவசாயிகள் உட்பிரவேகிக்க முடியாது தமன பொலிஸார் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதோடு முஸ்லிம் விவசாயிகளைக் கைது செய்து புனித பிரதேசத்திற்குள் புதைபொருள் அகழ வந்தோர் என பொய்யாக வழக்குத் தாக்கல் செய்து சிறையில் அடைத்துமுள்ளனர். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அணுகுமுறை அரசினால் பின்பற்றப்படல் வேண்டும். அரசியல் பக்கச்சார்பற்ற ஆட்சிமுறை கொண்டுவரப் படல் வேண்டும். பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த காணிகளை சுவீகரிக்காமல் அக்குறிப்பிட்ட மக்களிடம் ஒப்படைத்தல் வேண்டும். இக்காணிப் பிரச்சினைக்கு தனியான சிறப்பு நீதிமன்றம் அமைத்துத் தரவேண்டும். எங்களால் இழக்கப்பட்ட பொன்னன்வெளிக் கண்ட காணிகளை மீளவும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் அல்லது இக் காணியின் தற்போதைய பெறுமதியில் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment