ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர்களில் ஒருவரும், விளையாட்டு
துறை பிரதி அமைச்சருமான எம். எச். எம். ஹரீஸ் மிக நுட்பமான முறையில்
தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஆப்பு வைத்து உள்ளார்.
கட்சியின் செயலாளர்
நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பஸீர் சேகு தாவூத், கிழக்கின் எழுச்சி குழு
தலைவர் வபா பாருக் போன்றவர்கள் ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிராக
வெளிப்படையாக கிளர்ந்து செயற்படுகின்ற நிலையில் தலைவருடன் மிக நெருக்கமாக
ஒட்டி உறவாடி கொண்டே அமைதியான குண்டு போல நேரம் பார்த்து வெடித்து
இருக்கின்றார்.
வீட்டுக்கு வீடு மரம் செயல் திட்ட நிகழ்வு
சாய்ந்தமருதில் கடந்த வாரம் இடம்பெற்றபோது இவர் பேராளர்களில் ஒருவராக
கலந்து கொண்டு பேசினார்.
தலைவர் ரவூப் ஹக்கீம் 10 தாருஸலாம்களை
கட்டுகின்ற அளவுக்கு பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றார், ஒவ்வொரு
தேர்தல்கள், கட்சி கூட்டங்கள் வருகின்றபோதிலும் கட்சிக்காக பாரிய செலவுகளை
தனியாகவே செய்திருக்கின்றார்..... என்று பேச்சின் ஓரிடத்தில் அழுத்தி
கூறினார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒரு கல்விமான் ஆவார். உயர் தொழில் தகைமை உடைய சட்டத்தரணி ஆவார். இவர் அரசியலில் கற்று குட்டி அல்லர்.
எனவே
இவர் இப்பேச்சால் நேர கூடிய பின் விளைவுகளை முன்கூட்டியே அறிந்துதான் பேசி
இருக்கின்றார். இவரின் பேச்சு நாட்டின் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில்
கொட்டை எழுத்துகளில் வெளியானது. தொடர்ந்து இவரின் பேச்சை மேற்கோள் காட்டி
தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.
10
தாருஸலாம்களை கட்டுகின்ற அளவுக்கும், ஒவ்வொரு தேர்தல்கள், கட்சி
கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தனித்து செலவு செய்கின்ற அளவுக்கும் ஹக்கீம்
சொத்து வைத்திருக்கின்றார் என்றால் இவற்றை தேர்தல் திணைக்களத்துக்கு
வெளிப்படுத்தினாரா? என்று இக்கடிதத்தில் விபரம் கோரப்பட்டு உள்ளது.
இவ்வாறு
ஒரு கடிதம் கிடைக்கப் பெற்று இருப்பதை தேர்தல் திணைக்களம் உறுதிப்படுத்தி
உள்ளது. இக்கடிதத்தில் சொல்லப்பட்டு உள்ள விடயங்களின் உண்மை தன்மை குறித்து
விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் திணைக்கள அதிகாரி
ஒருவர் எமக்கு தெரிவித்தார். வரும் நாட்களில் தேர்தல் திணைக்களத்தால் ரவூப்
ஹக்கீம் குடையப்படுவார் என்று தெரிகின்றது.
ஆனால் பிரதி அமைச்சர்
ஹரீஸ் இப்பேச்சை ஆற்றுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அயல் கிராமத்தை
சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்ற
மந்திராலோசனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்று சாய்ந்தமருதில்
இருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.
இதே நேரம் இவரின் பேச்சை
தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது வரை பொய் என்றோ உண்மைக்கு புறம்பான தகவல்
என்றோ கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
Thanks: http://tnasri.com/news/2724http://tnasri.com/news/2724

0 comments:
Post a Comment