• Latest News

    September 12, 2016

    சமூக மாற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் பிரார்த்திப்போம் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன்

    சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப் இத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
    அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
    முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன.
    புனித மக்காவில் ஹஜ் கடமையின் போது அனைத்து பேதங்களையும் மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே வரையறைக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற நம்மால் ஏன் அதனை நமது சமூக வாழ்வில் நிலை நாட்ட முடியாது என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
    எனவே கடந்த கால, நிகழ்கால கசப்பான சம்பவங்களை படிப்பினைகளாகக் கொண்டு இந்த ஹஜ் பெருநாள் தினத்தில் சமூக மாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் வேண்டிய அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமூக மாற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் பிரார்த்திப்போம் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top