• Latest News

    September 07, 2016

    இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மலேசியா அரசினால் உயரிய விருது

    மலேசியாவின் பெராக் நகரில் நடைபெற்ற PANGLOR DIALOGE AWARD-2016 விருது வழங்கும் நிகழ்வில் மலேசிய அரசினால் வழங்கப்படும் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தித் துறையில் முதன்மையானவர் (Master class in Education & Community Development) எனும் உயரிய சிறப்பு விருது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 
    மலேசிய அரசினால் வழங்கப்படும் இந்த உயரிய விருதினை மலேசிய பிரதமர் சார்பில் அமைச்சர் வை.எல். டாத்ஹூக் அப்துர் வழங்கி வைக்க இராஜாங்க அமைச்சர் சார்பில் அவரது புதல்வர்  பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் அதனைப் பெற்றுக் கொண்டார். 
    மலேசியாவின் பெராக் நகரில் கடந்த 5ஆம் திகதி ஆரம்பமான PANGLOR DIALOGE மாநாட்டில் முதல் நாள் நிறைவில் PANGLOR DIALOGE AWARD-2016 விருது வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் கலந்து கொள்ளாத போதிலும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மலேசியா அரசினால் உயரிய விருது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top