பைஷல்
இஸ்மாயில் -
மட்டக்களப்பு,
பட்டிருப்புக் கிராமத்தில் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தை
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை,
சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட்
நஸீரினால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு
மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் எஸ்.சுதீஸ்னர் தலைமையில் இடம்பெற்ற
இந்த திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் பராமரிப்பு
மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு
சிறப்பித்தார்.
மேலும்
இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரை ராஜசிங்கம் மாகாண சபை
உறுப்பினர்களான ஜீ.கருணாகரன், ஜீ.கிரிஸ்ணப்பிள்ளை, ஆர்.துரைரத்ணம், எம்.நடராஜா ஆகியோர்களுடன்
கிழக்கு மாகாண கிழக்கு மாகாண சுகாதார, சுதேச
மருத்துவத்துறை, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார
அமைச்சின் செயலாயர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன் உள்ளிட்ட பலர் இதில்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment