பா.ஜ.க சார்பாக சென்னையில் இன்று (28-09-2016) நடந்த ஆர்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால், அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு,சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.அந்த பகுதியில் உள்ள ரோட்டில் தொப்பி அணிந்து நடந்து சென்ற மீரான் என்ற நபரை பிடித்து வெளியில் நின்றிருந்த பா.ஜ.க வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி மண்டபத்திற்குள் இழுத்து செல்ல முயற்சி செய்தனர். தடுக்க வந்த காவல் துறை அதிகாரியும் தாக்கப்பட்டுள்ளார். இதுவல்லாமல் அந்த ரோட்டில் சென்ற முஸ்லிம் தம்பதியினரும் தாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண்மணியின் புர்காவை பிடித்து இழுத்துள்ளனர். இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றி விட்டு தங்களை தாக்க பெட்ரோல் குண்டுடன் நான்கு முஸ்லிம் தீவிரவாதிகள் வந்ததாகவும், அதில் 3 பேர் ஓடி விட்டதாகவும், ஒருவரை நாங்கள் பிடித்துக் கொடுத்துளோம் என்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தி ஊடகங்களில் எச்.ராஜா மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பரப்பி வருகின்றனர்.
தமிழக முதல்வர் உடல்நல குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் மத கலவரத்தை நடத்த பா.ஜ.க பொறுப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பொய்யான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மத கலவர தீயை மூட்டி, வரும் உள்ளாட்சி தேர்தலில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழ்நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் A.ஹாலித் முகமது தொிவித்துள்ளார்.
,
,
0 comments:
Post a Comment