• Latest News

    September 07, 2016

    கல்முனை மாநகர ஆணையாளரை அச்சுறுத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர் - ஊழியர்களின் போராட்டம் நிறைவு!

    யூ. கே. காலித்தீன் -
    கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகர் உள்ளிட்ட இருவர் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    இவர்கள் இருவரையும் தலா 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் 1500 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவித்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி.பயஸ் ரஸ்ஸாக், எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்காக நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு  உத்தரவிட்டார்.
    இவர்களைக் கைது செய்யக் கோரி நேற்றும் இன்றும் மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றுக்கு ஆஜராக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்
    கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது நகரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வாகனத் தரிப்பு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது அதன் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி, அவமானப்படுத்தி, அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படாததைக் கண்டித்ததே மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர ஆணையாளரை அச்சுறுத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர் - ஊழியர்களின் போராட்டம் நிறைவு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top