அபுல் ஹசன் அன்வர்-
நேற்றிரவு
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும் பரவலாக அமைச்சர் றஊப் ஹக்கீம்
அவர்களை விளித்து பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று
விநியோகிக்கப்பட்டிருந்தது.
அந்த
துண்டுப்பிரசுரத்தின் மகுட வாசகம் ‘தெளிவான பதிலை அவசரமாக பகிரங்கமாக
சொல்லுங்கள்’ என்பதாக மிகவும் தடித்த எழுத்துக்களில் காணப்பட்டது.
போராளிகள் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்(1987) எனும் தரப்பினால் பெயர் குறித்து இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.
முஸ்லீம்
காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கட்சியை
ஸ்தாபித்த(1987) ஆரம்ப கால போராளிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட
இவர்கள், அஷ்ரபினால் முன்மொழியப்பட்ட முஸ்லீம் அரசியலுக்கான விடயங்கள்,
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசிலமைப்பில் உள்வாங்கப்படுமா
என றஊப் ஹக்கீம் அவர்களிடம் பகிரங்க வினாக்களை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு
கேள்விப் பிரசுரம் -01. என இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவ்வாறான கேள்விகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் இன்னும்
வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை இவர்கள் உண்டாக்கியுள்ளனர்.
எது
எவ்வாறாயினும் இன்றைய தினம் சாய்ந்தமருதில் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு
செய்யப்பட்டு அங்கு றஊப் ஹக்கீம் உரையாற்ற உள்ள நிலையிலேயே, காலத்தின்
தேவையாக உள்ள கேள்விகள் அடங்கிய அத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இக்கூட்டத்தில் இக்கேள்விகளுக்கு றஊப் ஹக்கீம் பதிலளிக்க
வேண்டும் என்பதே இத்துண்டுப் பிரசுரத்தினை வெளியிட்டவர்களின் நோக்கமாக
இருக்கலாம்.
பதில்சொல்ல
அவசியமில்லாத கேள்விகள் என்று விட்டுவிடக்கூடியவை அல்ல இக்கேள்விகள். ஆனால்
பதிலிருந்தால் அவசியம் றஊப் ஹக்கீம் பதிலளிப்பார்தானே.
பொருத்திருந்து பார்ப்போம். இன்றைய பொதுக்கூட்டத்தில் றஊப் ஹக்கீம் என்ன பேசுகிறார் என்று.
வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் உள்ளடக்கம்.
அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களே..!
இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில்......
முஸ்லிம் அரசியலுக்காக மாமானிதர் அஸ்ரஃப் அவர்களினால் முன்மொழியப்பட்ட
1. மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை பாதுகாக்கப்படுமா..?
2.
பேரம் பேசும் சக்தியை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்த விகிதாசாரத்
தேர்தல் முறை பாதுகாக்கப்படுமா..? அல்லது தொகுதி முறை
அறிமுகப்படுத்தப்பட்டு பேரம் பேசும் சக்தி இல்லாதொழிக்கப்படுமா..?
3. கல்முனை கரையோர மாவட்டம் பெற்றுத்தரப்படுமா..?
4. இனப்பிரச்சினைக்கான தீர்வின்போது, முஸ்லீம்களுக்கான சமனான அதிகாரமுள்ள அதிகார அலகு பெற்றுத்தரப்படுமா..?
5. இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுமா..? அல்லது, கொமிஷன்களை
கொட்டும் கொழுத்த அமைச்சுப் பதவிகளுக்காகவும், கைமாற(றி) ,ருக்கும்
மேற்குலகின் பணப் பெட்டிகளுக்காகவும் முழு முஸ்லீம் சமூகத்தையும்
விற்றுவிடப்போகிறீர்களா..? அல்லது புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்று
சமாளிக்கப்போகிறீர்களா...?
தெளிவான பதிலை அவசரமாக பகிரங்கமாகச் சொல்லுங்கள்
போராளிகள் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்(1987)
கேள்விப் பிரசுரம் - 01.


0 comments:
Post a Comment