இவர் முன்னாள் நகர பிதா. இயற்பெயர் கே.....பாயி.. அஸ்ரப்பின் கட்சியின் இன்றைய தலைவர் எதிர்த்தரப்புக்கு போன போது நிஜாமுதீனுடன் அடம்பிடித்து ஆளுந் தரப்பில் ஆகாசமாக இருந்தர்.
அவரை மீளவும் அஸ்ரப் கட்சியின் தலைவர் இணைத்துள்ளார். இதற்கு ஒரு விழாவையும் ஹ.......ம் நடத்தினார். இங்கு பேசிய அஸ்ரப் கட்சியின் தலைவர் ஹ....ம் வடிவேல், கவுண்டமணி, நாகேஷ்; சுருளிராஜன் ஆகியோர் போன்று ஜோக்கடித்து பேசியும், நடித்தும் காட்டினார். இதற்கு கைதட்டல்களையும், விசில்களையும் பெற்று ஹ.....ம் குஷியானார்.
வழமைக்கு மாறாக ஹ....ம் சார் தலைவன் என்றும் எண்ணாது மிகவும் மட்டகரமாக பேசினார். ஹ....ம் சாருக்கு என்ன நடந்தது. ஒரு போதும் இப்படி பேசமாட்டாரே என்ன நடந்தது இவருக்கு என எல்லோருக்கும் அங்கலாய்த்தார்கள். அவர் வார்த்தைக்கு வார்த்தை அ.இ.....காவின் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு திட்டிக் கொட்டினார். அரசியலில் இறங்கு முகம் என்றால் இப்படித்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் உளறுவார்கள். முக மோசமாக வார்த்தைகளை அடுக்கினார்.
சாதாரண வேட்பாளராக அஸ்ரப்பின் கட்சியில் சேர்ந்த அ.இ.....காவின் தலைவர் விற்குள் வந்த றிசாட் இவ்வளவு தூரம் வளர்ந்து ஒரு கட்சித்தலைவனாக ஆகி அரசியலில் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதை ஹ......ம் ஒருவகையாக ஓப்புக்கொண்டுவிட்டார். 'இப்போது அவர்கள் கொஞ்சக்காலம் ஆடத்தான் செய்கிறார்கள்' என்று கூறிய ஹ......ம் அ.இ......காவின் தலைவரை அடக்குவதற்கே காடைத்தன வழியை தேர்ந்தெடுத்தேன் என்று தனது பழி தீர்க்கும் எண்ணத்தை கொட்டிததீர்க்கிறார். அந்த பேயை மிரட்டும் ஆசாமிதான் கேபாயி..... என்று தெரிவித்தார்.
கட்சியை விட்டு விலகி கட்சிக்கு கே...பாயி துரோகம் செய்தார். ஹ....மின் இயலாமையால் சண்டியர்களும், கட்சிக்கு துரோகம் செய்தவர்களும் மீண்டும் இணைக்கப்படுகின்றார்கள்.
கொக்கோரக்கோ கும்மாலங்கா..
கல்முனையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அம்பாரைக்கு மாற்றப்பட இருந்தமையை அறிவீர்கள். தற்போது அது மாற்றப்படாது. கல்முனையில்தான் இயங்கும் என்று தெரிகின்றது. இதனை நாங்கள் செய்தோம் என்று அமைச்சர் றிசாட்டின் கட்சிக்காரர்களும், பிரதி அமைச்சர் ஹரீஸ்தான் செய்தார் என்று அவரது ஆதரவளர்களும் முகநூல்களில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் எது உண்மை. மக்கள் குழப்பம். கொக்கோரக்கோ கும்மாலங்கா..
தலைவரின் வாக்குறுதி நம்பிக்கையில்லை.
மாணிக்கமடு சிலை விவகாரம் பற்றி அமைச்சர்கள் ஹக்கீம், மனோ ஆகியோர்கள் பேசியுள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்று ஐ தொலைக்காட்சி வெளிச்சம (11.11.2016) நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூரிடம் இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள், அமைச்சர் மனோ கணேசனுடன் சென்று பிரதமரைச் சந்தித்ததாகவும் இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க தனக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு பிரதமர் கோரியதாகும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யூ.எல்.யாகூப் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் மனோ கணேசனுடன் சென்று பிரதமரைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் ஒரு வார அவகாசம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், என்னால் இவற்றை ஊர்ஜிதமாகக் கூற முடியாது என்ற பொருள்பட்ட அர்த்தத்தில் பதில் சொன்னார்.

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment