• Latest News

    November 13, 2016

    சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு

    யூ. கே. காலித்தீன் -
    சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் நடைபெற்றது.
    இந்நிகழ்வில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா பிரதம அதிதியாகவும் நிந்தவூர்அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தினதும், நிந்தவூர் பாதீமா அரபுக் கல்லூரியினதும் அதிபருமான மெளலவி அல்-ஹாபில் ஏ.ஏ.அலி அஹமட் ரஷாதி  பிரதம பேச்சாளராகவும் கலந்து  கொண்டு ஸக்காதின் முக்கியத்துவம் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்.
    இதன்போது 36 இலட்சத்து 19150 ரூபா பணமும் 193 மூடை நெல்லும் 70 வறிய குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
    மேற்படி நிகழ்வில் உலமாக்கள், பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top