• Latest News

    November 14, 2016

    ஹக்கீமின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருதில் கறுப்புக்கொடி

    சாய்ந்தமருது பிரதேசத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேசத்தில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
    சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே அமைச்சர் ஹக்கீம் இன்று பிற்பகல் இங்கு வருகை தரவுள்ளார்.
    கடந்த காலங்களில் இதற்காக பல கோடி ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை 16 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது மு.கா. அரசியல்வாதிகள் பகற்கொள்ளையடிப்பதற்காக செய்யப்படும் ஏமாற்று வேலை என குற்றம் சாட்டப்படுகிறது.
    இதனைக் கண்டித்தே அமைச்சர் ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதி, பெரிய பள்ளிவாசல், உல் வீதிகள் உட்பட பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
    இன்று மீண்டும் திறக்கப்பட விருந்த தோணா அபிவிருத்திக்கான பெயர்ப்பலகையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
    (அஸீம் கிலாப்தீன்)





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கீமின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருதில் கறுப்புக்கொடி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top