• Latest News

    November 14, 2016

    ஹக்கீம் கல்முனையில் அபவிருத்திகளை ஆரம்பித்து வைக்கின்றார்

    (எஸ்.அஷ்ரப்கான்)
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரிஸின் அயராத முயற்சியினால் இந்த அபிவிருத்தி விழாக்கோலம் இன்று இடம்பெறுகின்றது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி  ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு இன்னும் பல மு.கா. அரசியல் பிரமுகர்களும் அதிதிகளும் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.
    இத்தினத்தில் அபிவிருத்தி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிகழ்வுகளாக, கல்முனை இறைவெளிக்கண்டம்(கிறீன்பீல்ட்) பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல், சாய்ந்தமருது வொலிவோரியன் பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல், சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடுதல், சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் என்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் இன்னும் பல்வேறு திட்டங்களும் மாலைவரை அபிவிருத்திகாண உள்ளது. இறுதியில் இன்று மாலை  7.00 மணிக்கு சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
    இந்த குறித்த அபிவிருத்தியினை மேற்கொள்ளும் பிரதி அமைச்சர் ஹரீஸ் உட்பட்ட குழுவினருக்கு கல்முனை மாநகர மக்கள் தமது நன்றிகளை தெரிவிப்பதுடன் சகல அபிவிருத்திகளையும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களே    பூரணப்படுத்தி  வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்



     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கீம் கல்முனையில் அபவிருத்திகளை ஆரம்பித்து வைக்கின்றார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top