• Latest News

    November 14, 2016

    முஸ்லிம்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் : டிரம்ப் வேண்டுகோள்.

    அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று
    அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் லத்தீன் இன மக்களை துன்புறுத்துவதை நிறுத்தும்படி அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அமெரிக்க ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

    அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், ஹிஸ்பானிக், கருப்பின மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக சமீப காலமாக சகிப்புத்தன்மையின்மையும், வெறுப்புணர்வும், துன்புறுத்தல்களும் பெருகிவருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறியதாவது:-

    இதை கேள்விப்படும்போது மிகவும் கவலையாக உள்ளது. இத்தகைய செயல்பாடுகளை நிறுத்துங்கள் என நான் சொல்வது உதவிகரமாக இருக்குமானால், உங்கள் கேமராவுக்கு முன்பாகவே ‘இதை நிறுத்துங்கள்’ என தெரிவித்து கொள்கிறேன்.

    இப்படி எல்லாம் செய்யாதீர்கள், இத்தகைய செயல்கள் கொடூரமானது. நான் இந்த நாட்டை ஒன்றிணைக்கப் போகிறேன். என்னைப்பற்றி சரியாக தெரியாத சில பிரிவினர் என்னைக் கண்டு அச்சப்படுகின்றனர். அதனால் எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் தேர்தலை சந்தித்துள்ள நமக்கு சிலகாலம் தேவைப்படும் என்பது போராட்டக்காரர்களுக்கும் தெரியும். எனினும், தொழில்ரீதியான போராட்டக்காரர்கள் தங்களது வேலையை செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றிபெற்று எங்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதை பலர் விமர்சித்திருப்பார்கள். அதை வேறு மாதிரி சித்தரித்து விமர்சித்திருப்பார்கள். அப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு நமது நாட்டில் உள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் : டிரம்ப் வேண்டுகோள். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top