முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்லுகின்றதொரு நாடாக கட்டார் உள்ளது. இங்கு தொழில் புாிகின்ற இலங்கை முஸ்லிம்களை சந்தித்துக் கொள்கின்றார்கள். இதற்கு பின்னால் அரசியல் நகர்வுகள் உள்ளன.
அந்த வகையில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது கட்டார் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் அங்குள்ள இலங்கை முஸ்லிம்களை சந்தித்து பேசி வருகின்றார். ஆயினும், கட்டாாில் உள்ள முஸ்லிம் நண்பர்களுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. ஆதலால், முஸ்லிம் காங்கிரஸின் சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டு தெளிவு பெற வேண்டும்.
மு.காவின் தலைவர் அஸ்ரப் மரணித்து 16 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. அவாின் மரணத்தை விசாரணை செய்த தனிநபர் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதனை ஏன் இன்னும் வெளியிடவில்லை. மு.கா வெளியிடுமாறு அரசாங்கத்தை கேட்கவில்லை?
15 வருடங்களாக தலைவராக உள்ள ரவூப் ஹக்கீம் சாதித்த அபிவிருத்திகள், உாிமைகள் யாவை?
மு.காவின் வளர்ச்சி தொடர்ந்து பின் வாங்கிக் கொண்டு போவதற்கு யார் காரணம்?
15 வருடங்கள் தலைவராக உள்ள ரவூப் ஹக்கீம் அவரது கண்டி மாவட்டத்தில் சுமார் 02 இலட்சம் முஸ்லிம் உள்ளார்கள். இங்கு மு.காவிற்கு 50ஆயிரம் வாக்குகள் இல்லையே. தமது சொந்த மாவட்டத்தில் கட்சியை வளர்க்க முடியாதவர் கட்சிக்கு தலைமை வகிக்க முடியுமா?
கரையோர மாவட்டம் கிடைக்குமா? கரையோர மாவட்டக் கோாிக்கைக்கு வயது 30இற்கு மேல். மு.கா மௌனமாக இருப்பது ஏன்?
இரண்டு வாரத்திற்கு சல்மானுக்கு வழங்கிய தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதில் உள்ள தாமதம் என்ன?
மற்றவர்கள் தேசிய பட்டியல் கேட்கின்றார்கள் என்ற பழைய விடையை தள்ளிவிட்டு புதிய விடை என்ன? அதனை யாருக்கு வழங்க உத்தேசம்?
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் மு.காவின் முடிவு என்ன?
தமிழர்களின் காணியை அரசாங்கம் படிப்படியாக விடிவித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் காணிகள் எப்போது விடுவிக்கப்படும்?
கட்சிக்குள காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்காதிருப்பது ஏன்?
கடந்த இரண்டு மாதங்களான கட்சியின் உயர்பீடக் கூட்டம் நடைபெறவில்லை. என்ன காரணம்?
மாணிக்கமடுவில் உள்ள புத்தர் சிலை எப்போது அகற்றப்படும்?
அந்த சிலை அகற்றப்படாது போனால் மு.காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பௌத்த இனவாதிகளுக்கு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் ஆதரவு உள்ளதாக மு.காவின் எம்.பிமாரே சொல்லுகின்றார்கள். அப்படியாக இருந்தால் அரசாங்கத்தில் மு.கா இருப்பது எதற்காக?
மு.காவின் தலைமையகம் தாருஸ்ஸலாம் யாருடைய பெயாில் உள்ளது?
கட்சியின் பெயாில் தாருஸ்ஸலாம் இருக்கிறது என்று கூறுவார். அதற்கான ஆவணத்தை கட்சியின் உயர்பீடத்தில் இது வரை காட்டாது. தலைவரை நம்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் உள்ள ரகசியம் என்ன?
மு.காவின் தலைமையகம் தாருஸ்ஸலாம் மூலம் பெற்றுக் கொண்ட வரவு எவ்வாறு செலவு செய்யப்பட்டது ?
ரவூப் ஹக்கிம் பெற்றுள்ள அமைச்சர் பதவிகளில் உறவினர்களே அதிகம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்?
புதிய அரசியல் யாப்பில் மு.காவின் யோசனை திட்டம் என்ன?
முஸ்லிம்குளுக்கு பாதகமாக அமையும் தொகுதிவாாி தேர்தல் முறையை மு.கா ஆதாிப்பது எதற்காக?
ஐ.தே.கவின் கலகெதர தொகுதி அமைப்பாளர் நீங்கள் என்பது உண்மையா?
அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் இதனை தலைவாின் சாதனை என்றார். இது உண்மையா?
பசீருடன் முரண்பாடு ஏற்படக் காரணம் என்ன?
ஹஸன்அலியின் செயலாளர் பதவியின் அதிகாரத்தை குறைத்தது எதற்காக?
கட்சிக்கு துரோகம் செய்த பாயிஸ் போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது எதற்காக?
கட்சியை விட்டு சென்றவர்களை சேர்க்க வேண்டுமென்று விடை கூறலாம். அப்படியானால் கட்சிக்கு விசுவாசம் காட்டிய ஹஸன்அலியையும், பசீரையும் ஓரங்கட்டியருப்பது ஏன்?
ஜனாதிபதித் தேர்தல் மஹிந்தவிடம் பணம் பெற்று பின்னர் அதனை திருப்பிக் கொடுத்தாக சொல்லப்படுகிறது?
18வது திருத்தத்திற்கு ஆளுக்கொரு கோடி பெற்றதாக கூறும் குற்றச்சாட்டை இது வரைக்கு மறுக்காது இருப்பது ஏன்?
அண்மைக்காலமாக மு.கா பொிய விழாக்களை நடாத்திக் கொண்டிருப்பது தலைவர் பதவியை காப்பாற்ற என்று சொல்லபடுகின்றதே?
எல்லா ஊர்களிலும் கட்சியின் மத்திய குழுக்கள் நீண்டகாலமாக இயங்காமல் இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?
கட்சியில் நீண்ட காலமாக உள்ள 38, 40 வயது கட்சித் தொண்டர்களுக்கு தொழில் வழங்காது 18வயதுக்காரர்களுக்கு தொழில் வழங்கியுள்ளமை எதற்காக?
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பனவுக்கு தொழில் கொடுப்பதாக கூறப்படுகின்றது?
குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக கட்சியை வழி நடத்திக் கொண்டிருப்பது ஏன்?
ஹலால், பள்ளிவாசல்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்குளுக்கு எதிராக நடந்தவைகளைப் பற்றி அரசாங்கத்திடம் குரல் கொடுக்காது அடங்கியிருப்பதன் மர்மம் என்ன?
இன்றைய அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவியுள்ள மு.கா அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தம் என்ன?
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முன்னேற்றமின்றி உள்ளது. இதற்கு எடுத்த நடவடிக்கை என்ன?
இவ்வாறு பல கேள்விகள் உள்ளன. இதனை கட்டாாில் உள்ளவர்கள் வைப் ஹக்கீமிடம் கேட்க வேண்டும்.
இவ்வாறு பல கேள்விகள் உள்ளன. அவற்றிக்கு கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் விடைகளை கேளுங்கள்.

0 comments:
Post a Comment