- பைஷல் இஸ்மாயில் -
நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்முனை மத்தியட்ச சபையின் உறுப்பினரும் முஸ்லிம் விவாகப் பதிவாளருமாகிய எம்.எஸ்.முஹ்மூத் லெப்பை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்பயிற்சி நெறிக்கான கடிதங்கள் யாவும் நேற்றைய தினம் (22) கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் ஹனியினால் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பயிற்சி நெறியானது எதிர்வரும் 27 ஆம் திகதி இருந்து எதிர்வரும் மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை குறித்த 5 நாட்களிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களிடத்தில் ஏற்படுகின்ற பிணக்கு, தகராறு, நீதி மன்றத்தினால் அனுப்பி வைக்கப்படுகின்ற வழக்கு, ஒருவருக்கொருவர் இடையில் உண்டாகும் முரன்பாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு எந்த வகையில் சுமுகமான இணக்கப்பாட்டினை வழங்கி வைப்பது பற்றி இப்பயிற்ச்சிப் பட்டறை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment