• Latest News

    November 24, 2017

    வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தெற்கில் சிங்களவர்களின் சொத்துக்க்களை கொள்ளையடித்தனர்.

    - ஏ எம் எம் முஸம்மில் -

    சம்பிக்க ரணவக்கவின் “ அல் ஜிஹாத் அல் கைதா” நூலிலிருந்து 

    டக்கிலிருந்து துரத்தப் பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள்  புலிகளால் கைப்பற்றப் பட்டன. தென்பகுதிக்கு வந்த முஸ்லிம்கள் கல்பிட்டி ,புத்தளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள். ( 278ம் பக்கம்)    அஷ்ரப் தமது அடிப்படைவாத அரசியல் பயணத்தில் தாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவாகினார். அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப் பெரியதொரு அரசியல் கட்சித் தலைமையகமொன்றை தாருஸ்ஸலாம் எனும் பெயரில் நிறுவினார். அத்துடன் பிரமாண்டமான இலங்கையின் உயர்ந்த கட்டிடமான  இஸ்லாமிய தகவல் நிலையமொன்றை யும் கட்டினார்.   இவற்றுக்கான பணத்தை கோடிக்கணக்கில் சவுதி அரசாங்கம் கொடுத்துதவியது.  சவுதி அரசாங்கத்தால் அடிப்படைவாததை நன்கு பயிற்றப் பட்ட ஹாபிஸ் நஸீர் அவர்கள் இத்திட்டத்தின்  பிரதான செயட்பாட்டாளராக செயற்பட்டு வருகின்றார். 
            அஷ்ரப் மரணிக்காமல் இருந்திருந்தால் 2012 ம் ஆண்டளவில் எமது இலங்கை நாட்டின் ஆட்சியை அவர் உருவாக்கிய நுஆ கட்சியின் மூலம் கைப்பற்றியிருப்பார்.  (பக்கம் 280)
    முஹம்மதின் மரணத்தின் போது அடுத்த தலைவர் யார் என்று அவர்களுக்குள் எழுந்த சர்ச்சையை போல் அஷ்ரபின் மரணத்திற்கு பின்னும் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டது. பேரியல்,ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மு கா வின் அடுத்த தலைமைத்துத்திகாக  போட்டியிட்டார்கள். எதிர்காலத்தில் இந்த நாட்டில் ஹகீம் அதாவுல்லாவுக்கிடையிலான மோதல்களை போலல்லாமல் எமது பாராளுமன்றத்திட்கும் ஜிஹாத் ஆயுதக்  குழுக்களுக்கும் இடையிலேயே மோதல்கள் நடக்கும் . 
          வடக்கையும் கிழக்கையும் பிரபாகரனுக்கு வழங்குவது போலல்லாது, உசாமா பின் லாதினை கிழக்குக்கு கொண்டுவந்து சேர்ப்பது அதைவிட அபாயகரமானதாகவே அமையும். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் இடையிலான போட்டியும் , தமிழ் பாசிச பிரிவினைவாத யுத்தத்தாலும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பலவீனம், முஸ்லிம்களின்  விரைவான சனத்தொகை பெருக்கத்திற்கும் கல்வியில் அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது. அத்துடன் எண்ணெய் பணத்தின் உறுமல் போன்ற அனைத்துமே இலங்கையில் வெடிப்பதற்கு தயார் நிலையிலுள்ள ஒரு எரிமலையை தோற்றுவித்துள்ளது. அரசாங்க உளவுப் பிரிவின் தகவல்களின் படி இலங்கையின்  கிழக்குப்பகுதியில் தமக்கிடையில் மோதிக்கொள்ளும் நான்கு ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அறியப்பட்டுள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தெற்கில் சிங்களவர்களின் சொத்துக்க்களை கொள்ளையடித்தனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top