முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மரணம் பற்றி விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பகுதிகள் காணாமல் போயுள்ளதாக சுவடிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனர்.
மர்ஹும் அஸ்ரப்பின் மரண அறிக்கை விவகாரம் தொடர்பில் தகவல் அறியும் ஆணைக் குழுவின் விசாரணை அமர்வு நேற்றைய தினம் கொழும்பு 7இல் உள்ளஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் ஆணைக் குழுவின் அழைப்புக்கிணங்க பிரசன்னமாகியிருந்த சுவடிகள் திணைக்களத்தின் அதிகாரிகளே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அஸ்ரப் மரண விசாரணை தொடர்பான இரு அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து எமது சுவடிகள் திணகை;களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு அறிக்கை 71 பக்கங்களகை; கொண்டது. மற்றொரு அறிக்கை 300 பக்கங்களைக் கொண்டது. எனினும், 71 பக்க அறிக்கையிலுள்ள 3 தாள்கள் மாத்திரமே எம்மால் கண்டு பிடிக்க முடிந்தது. ஏனைய பக்கங்களைக் கண்டறிய முடியவில்லை. இது விடயமாக 300 பக்கங்களைக் கொண்ட மற்றுமாரு ஆவணத்தையும் காணவில்லை. எனினும், எனது சுவடிகள் திணைக்கள ஆவணக் காப்பகத்தில் இது தொடர்பில் மேலும் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்குரிய கால அவகாசத்தை வழங்கினால் அவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும் என சுவடிகள் திணைக்கள அதிகாரிகள் இங்கு சாட்சியமளித்தனர்.
இதனையடுத்து காணாமல் போனதாகக் கூறப்படும் மேற்படி அறிக்கைகளை முழுமையாக தேடி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கோரி சுவடிகள் திணைக்கள தலைமை அதிகாரிக்கு ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் எனவும், அதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் 16.01.2018 அன்று இடம்பெறவுள்ள அடுத்த விசாரணை அமர்வில் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். நேற்றைய (20.11.2017) அமர்வில் முறைப்பாட்டாளர்களான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : வீரகேசரி
0 comments:
Post a Comment