• Latest News

    November 27, 2017

    அம்பாறை மாவட்டத்தில் அடை மழை இயல்பு நிலை முடக்கம்

    - பைஷல் இஸ்மாயில் -
    ம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது 

     பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.  வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்குள்ளான நிலையில் சில அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகையும் குறைந்து காணப்பட்டது.

    வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் உள்ளிட்ட குழுவினர் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு விரைந்து அதனை அகற்றும் பணியில் மிகத் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்டத்தில் அடை மழை இயல்பு நிலை முடக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top