- பைஷல் இஸ்மாயில் -
அனர்த்த காலங்களின்போது மக்களைப் பாதுகாக்கும் உத்தியோகத்தர்களாகவும், ஊழியர்களாகவும் நாம் இருந்துகொண்டு செயற்படவேண்டும். இதற்காக நாம் சில தியாகங்களை செய்யவேண்டியவர்களாகவே உள்ளோம். அதற்காக எமது விடுமுறை எடுக்கும் விடயத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், மிக அவசர தேவைப்பாடுகள் இருந்தால் மாத்திரமே தங்களின் விடுமுறைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.
அனர்த்த கால சூழலுக்கு ஏற்றவாறு திட்டமொன்றினை முன்வைத்த கலந்துரையாடல் இன்று (28) நகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடங்கிலும் அடைமழை தொடராக பெய்துவருவதன் காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் டெங்கு நுளம்பு பரவுதல் போன்றவற்றிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சறிக்கை நடவடிக்கைகளுக்கு ஏறாவூர் நகர சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதற்கான வேலைகளை முன்னெடுப்பதற்கு வாகனங்களையும் தயாராக வைத்திருக்கவேண்டும் என்று கூறினார்.
அத்துடன், வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான கொள்களன்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் அதற்கு ஏற்றவாறு நகர சபையின் முகாமைத்துவ குழு உள்ளிட்ட ஊழியர்கள் கொண்ட குழுவினர் இன்றிலிருந்து தயார் நிலையில் இருக்கவேண்டும் என்ற பணிப்புரையையும் விடுத்தார்.
பிரதம முகாமைத்துவ உதவியாளர், உத்தியோத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் கடந்த கால அனர்த்த வேலைகளில் மக்களுக்கு வழங்கிய அவசர கால சூழலில் பெற்றுக்கொண்ட அனுபங்கள் பற்றி பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment