- எம்.வை.அமீர் -
.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள, ஆய்வாளர்களுக்கு வருடத்துக்கு ஐந்து லட்சம் என்ற கொடுப்பனவை, ஆய்வுதுத்துறையையும் ஆய்வாளர்களையும் இன்னும் வலுவூட்டும் விதத்தில் அடுத்த வருடம் முதல் பத்து லட்சமாக அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் “செழிப்பான எதிர்காலத்தை நோக்கிய ஆராய்ச்சிகளை மேன்படுத்துதல் ” எனும் தொனிப்பொருளில் ஆறாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு மாநாடு 2017-11-28 ஆம் திகதி பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செழிப்பான எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு ஆய்வு ரீதியான முன்னெடுப்புகள் மிகுந்த வலுச்சேர்க்கும் என்பதால் குறித்த துறைக்காக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஏனைய பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடும் அளவுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை இங்கு சமர்ப்பிப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. என்றும் எதிர்காலத்தில் இதைவிட அதிகமான ஆய்வறிக்கைகளை இந்தப் பல்கலைக்கழகம் முன்கொண்டுவரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
பிரயோக விஞ்ஞான பீடம் எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்புக்கான வாய்ப்புக்களை இப்பிராந்திய மாணவர்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட உபவேந்தர், அதற்கான முன்மொழிவுகளை இங்குள்ள சிரேஷ்ட கல்வியாளர்கள் வழங்கினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் உரையாடி உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் இ.எம்.ஜே.எம் றிஸ்வியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக வன ஜீவராசிகள் மேன்பாட்டு அமைச்சின் ஆலோசகர் வைத்திய ஜோதி பேராசிரியர் சரத் விமல வண்டார கொட்டகம அவர்கள் கலந்துகொண்டு ஆய்வாளர்கள் மேற்கொள்ளவேன்டியா யுக்திகள் தொடர்பில் உரையாற்றினார்.
இடம்பெற்ற ஆய்வு மாநாட்டுக்கு 33 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஆய்வு மாநாட்டின் செயலாளராக ஏ.மன்ஜீவன் செயற்பட்டார்.
நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் மற்றும் பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தோர் பிரதிப் பதிவாளர், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
.
0 comments:
Post a Comment