இன்றைய காலகட்டத்தில் நம்மில் ஏறத்தாழ அனைவரும் செயற்கையான இயந்திர வாழ்க்கையே வாழ்ந்து வருகிறோம். காலை எழுவது முதல் இரவு உறங்கும் வரை பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறோம். காலம் தாழ்ந்த உணவு முறை, எதிர்வினை பாரா உணவு வழக்கம் என எதிர்காலம் என்ற ஒன்றை நினைத்து நிகழ்காலத்தை வருத்திக்கொள்கிறோம்.
நாம் உண்ணும் உணவை, பொறுமையாக மென்று கடித்து ருசித்து உண்கிறோமா என்று நமக்குள் கேள்வி கேட்டாலே நம் அன்றாட நிலைமை புரியவரும். இவ்வாறான காரணங்களால் தான் இன்று நம்மில் பெரும்பாலானோர் எண்ணற்ற நோய்களால் அவதிப்பட்டு வருகிறோம்.
அந்த வகையில் வயது வித்தியாசமின்றி நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் அல்சர். இதற்கான காரணங்களாக பலவாறு கூறப்படுகிறது. அதில் மிக பொதுவான காரணம் சரியான நேரத்துத்துக்கு சாப்பிடாததும், சில வேளைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பதுமே என்கின்றனர் உடல் நல வல்லுநர்கள்.
இவ்வாறு அதிகளவில் காணப்படும் இந்த அல்சருக்கு நம் தமிழ் பாரம்பரிய மருத்துவ முறையில் மிக எளிதான சிகிச்சை முறை உள்ளது. அதன்படி, சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

0 comments:
Post a Comment