• Latest News

    November 24, 2017

    சி.வி.விக்னேஸ்வரன் இனவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதை நிறுத்தவேண்டும் - அமைச்சர் சந்திம காட்டம்

    னவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதை நிறுத்திவிட்டு உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமைதாங்கி பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் என்று தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி வலியுறுத்தியுள்ளார்.

    தென்னிலங்கையிலுள்ள 90 வீதமான சிங்கள பௌத்த மக்கள் நல்லிணக்கத்தை முழுமையாக அமுல்படுத்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைத்த, சிங்கள சமூகத்தில் வாழ்ந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனியும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    கொழும்பு மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் அடுத்த ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையில் இன்றைய தினம் பகல் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் பண்டு பண்டாரநாயக்கவும் கலந்துகொண்டார்.

    இதன்போது புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் தெரிவுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

    இதன் பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தபோது, வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    “வடமாகாண முதலமைச்சர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசராவார். கொழும்பில் நிரந்தர வதிவிடர். தெற்கில் சிங்கள குடும்பங்களுக்கு தமது பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுத்தவர். எனவே நாங்கள் நம்புகிறோம், கொழும்பில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட கொழும்பில் கல்விகற்ற, பிள்ளைகள், பேரன்,பேத்திகள் கொழும்பில் வாழும்போது, முதலமைச்சருக்கு சிறந்த செயற்பாடுகளை செய்ய கடமையுள்ளது. மாறாக தேசிய ரீதியில் இனவாதத்தைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்தாமல் அவரது பொறுப்பை செய்ய கடமைபட்டுள்ளார்.

    தெற்கிலுள்ள 90 சதவீதமான பௌத்த மக்கள் நல்லிணக்கத்தை முழுமைப்படுத்த உணர்வோடு ஊக்கத்தோடு ஒத்துழைக்கின்றனர். அதேபோல வடக்கிலும் மக்கள் அவ்வாறு செயற்படுவார்கள் என்று நம்புகிறோம். இனவாத தீப்பிழம்பை மீண்டும் ஏற்படுத்த தெற்கு சிங்கள மக்களும், வடக்கில் தமிழ் மக்களும் செய்தால் அது பிழையாகும்.

    தமிழ் ஊடகங்கள் என்ற வகையில், சிங்களத்தில் கல்விகற்ற, சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைத்த சிங்கள பிள்ளைகளை திருமணம் செய்த குடும்பத்திலுள்ள முதலமைச்சருக்கு நன்கு விளங்கும் என்ற வகையில் இனவாதத்தை முற்றாக நிறுத்துவதற்கு கடமையுணர்வுடன் செயற்படுமாறு சென்று கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சி.வி.விக்னேஸ்வரன் இனவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதை நிறுத்தவேண்டும் - அமைச்சர் சந்திம காட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top