முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்தால் அனைத்து பிக்குமார்கள் மற்றும் தேரர்களையும் வீதிக்கு அழைத்துப் போராடுவோம் என்ற எச்சரிக்கையை தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் விடுத்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதோடு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவரது கைது செயற்பாடு பிற்போடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் கொழும்பு–அபயராமய விகாரையில் இன்றைய தினம் தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பு விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முருந்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு விடுத்தார்.

0 comments:
Post a Comment